செய்திகள் மலேசியா
கொரோனா UPDATE: 101 வயது மூதாட்டி உட்பட 76 பேர் மரணம்
கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 76 மரணச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அவர்களில் 101 வயது மூதாட்டியும் அடங்குவார்.
கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு முடக்க நிலை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 914ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 459 பேருக்கு சுவாச உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில் 76 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 101 வயதான, சிலாங்கூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,844ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து 8,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 572,113ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதே போல் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 652,204ஆக கூடியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
