நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5793

கோலாலம்பூர்:

மலேசியாவில் இன்று புதிதாக 5,793 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,582 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையைக் காட்டிலும் (987) குறைவு. இது சற்று ஆறுதலான தகவல்.

இரண்டாம் இடத்தில் நெகிரி செம்பிலான் உள்ளது. அங்கு மட்டும் 618 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

சரவாக் 569 பேரும் கோலாலம்பூர் 559 பேரும் ஜொகூரில் 504 பேரும், சபாவில் 378 பேரும் கிளந்தானில் 337 பேரும் லாபுவானில் 250 பேரும் பினாங்கில் 198 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset