
செய்திகள் மலேசியா
மலேசியாவிலிருந்து ரோஹின்யா அகதிகளை வெளியேற்றினால், அவர்களை எந்த நாடும் ஏற்கத் தயாராக இல்லை: குடிநுழைவுத்துறை இயக்குனர்
கோலாலம்பூர்:
மியான்மர் உட்பட வேறு எந்த நாடும் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாததால் மலேசியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மலேசியாக் குடிநுழைவுத் துறை எஇயக்குநர் டத்தோ கைருல் டைமி தாவூத் (Datuk Khairul Dzaimee Daud) தெரிவித்திருக்கிறார்.
சினார் ஹரியான் பத்திரிகையுடனான ஒரு நேர்காணலில், கைருல் இவ்வாறு கூறினார். மியான்மரை விட்டு வெளியேறும்போது ரோஹிங்கியாக்கள் மலேசியாவைத் தங்கள் புகலிடமாகவும் பாதுகாப்பானதாகவும் கருதினார்கள்.
“2019 முதல், மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ரோஹிங்கியா அகதிகளும் நாடு முழுவதும் பல்வேறு குடிநுழைவு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக்காவல்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ரோஹின்யா அகதிகளும் ஜூன் 1 ஆம் தேதியன்று மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். ஏனெனில், அவர்களது தாய்நாடான மியான்மர் அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்ல தயங்குகிறது.
அவர்கள் தகுந்த ஆவணம் இல்லாமல் குடியேறியவர்கள் என்றாலும், மலேசியா அவர்களின் சொந்த நாடான மியான்மர் அவர்களை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப முடியாது என்று அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm