நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உலக கோப்பை கால்பந்து: கத்தாருக்கு இந்தியா ஆட்டிறைச்சி ஏற்றுமதி

கொல்கத்தா:

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இருக்கும் கத்தாருக்கு ஆட்டு இறைச்சி ஏற்றுமதியை மேற்குவங்க அரசு தொடங்கியுள்ளது. .

இதுகுறித்து மாநில கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்வபன் தேவ்நாத் கூறுகையில்,

கத்தாருக்கு மட்டுமின்றி மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (ஏபிஇடிஏ) அனுமதி பெற்றுள்ள குவைத், ஹாங்காங், மாலத் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் மேற்குவங்கத்திலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

We can't kill cows, but globally lead in beef exports - The Economic Times

மாநில கால்நடை மேம்பாட்டுக் கழகத்துக்குச் சொந்தமான ஹரிங்கடாவில் உள்ள ஆடு வெட்டும் மையத்திலிருந்து இறைச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் கத்தார் நாட்டுக்கு இறைச்சியை கூடுதலாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மொத்தமாக 1.2 மெட்ரிக் டன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இதுவரை கிடைத்திருக்கிறது. மாதத்துக்கு 7 டன் இறைச்சி 6 பிரிவுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset