நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வெனிசுவேலாவில் அரசியல் மாற்றம்: உலக எண்ணெய் விலை சரிவு

டோக்கியோ,

அமெரிக்கா வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைதாகியதை அடுத்து, இன்று உலக எண்ணெய்களின் விலைகள் குறைந்தன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் களஞ்சியம் கொண்ட நாடான வெனிசுவேலாவிலிருந்து அதிக அளவிலான எண்ணெய் சந்தையில் நுழைவது அதிகப்படியான விநியோகம் குறித்த கவலைகளை அதிகரிக்கும் என்றும், சமீபத்திய மாதங்களில் குறைந்து வரும் எண்ணெய் விலைகளில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய சந்தை வர்த்தகத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.21 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 60.62 அமெரிக்க டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) 0.35 சதவீதம் சரிந்து 57.12 டாலராகவும் பதிவானது.

சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்க படைகள் கராகாஸில் தாக்குதல் நடத்தி, மடூரோவையும், அவரது மனைவியையும் நியூயார்க்கில் போதைப்பொருள் தொடர்பான கூட்டாட்சி குற்றச்சாட்டுகளுக்கு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுவேலாவின் எண்ணெய் துறையை அமெரிக்க நிறுவனங்கள் மறுசீரமைக்கும் என்றும், அந்த நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் தெரிவித்தார்.

பல ஆண்டுகளான முதலீட்டு பற்றாக்குறைகளின் தடைகளால், வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தி தற்போது தினசரி சுமார் 10 லட்சம் பீப்பாய்களாக குறைந்துள்ளது; இது 1999-ஆம் ஆண்டில் இருந்த 35 லட்சம் பீப்பாய்களிலிருந்து பெரிதும் வீழ்ச்சியடைந்ததாகும்.

எனினும், பெரும் முதலீட்டு தேவையால், எண்ணெய் உற்பத்தியை விரைவில் அதிகரிப்பது எளிதல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset