நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய விமானங்களில் இளநீர் விற்பனை: உலக சந்தையை நோக்கும் உள்ளூர் தொழில்முனைவோர்

கோலாலம்பூர்:

சர்க்கரை சேர்க்கப்படாத மலேசிய இளநீர் தற்போது உலக விமானப் பயணிகளிடம் உயர்தர பானமாக இடம் பிடித்து வருகிறது. என்பி ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நவநித் பிள்ளை, உள்ளூர் இளநீரை பிரீமியம் தயாரிப்பாக உயர்த்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்.

கடந்த டிசம்பரிலிருந்து, அவரது நிறுவனத்தின் இளநீர் பாத்திக் ஏர் நிறுவனத்தின் உள்நாட்டு, சர்வதேச விமானங்களில் வழங்கப்படுகிறது.

கடுமையான விமான உணவு பாதுகாப்பு சோதனைகளை கடந்து இந்த அனுமதி கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

இளநீர் உடலுக்கு ஈரப்பதம் வழங்குவதோடு, ஜெட் லேக் குறையவும் உதவுகிறது என்றார்.

தற்போது சிங்கப்பூர் சந்தையிலும் நுழைந்துள்ள இந்த தயாரிப்பை, தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நிறுவனம் முக்கியமாகக் கருதுகிறது; தேங்காய் ஓடுகள் உரமாக மாற்றி மீண்டும் தோட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.

முன்னதாக பதிப்புத்துறையில் பணியாற்றிய நவநித், கோவிட் கால மாற்றங்களுக்குப் பிறகு விவசாயத்தில் ஈடுபட்டார்.

அரசின் உதவியுடன் முதலில் அன்னாசி பயிரிட்ட அவர், பின்னர் கோலா சிலாங்கூரிலிருந்து தேங்காய்களை கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு விற்பனை செய்தார். நாளுக்கு 30 தேங்காய்களிலிருந்து ஆயிரங்களாக வளர்ந்த வணிகம், பின்னர் பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலையாக மாறியது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset