நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிராக 3.96 நிலையில் வலுவாகத் தொடரும் ரிங்கிட்

கோலாலும்பூர்:

அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் நாணய சந்தையில் தலையீடு செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் சூழலில், இன்று காலை அமெரிக்க டாலருக்கு எதிராக 3.96 என்ற நிலையில் ரிங்கிட் தொடங்கி தனது நிலைத்த வலிமையைத் தக்க வைத்துள்ளது.

இன்று காலை 11 மணியளவில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9650/9750 என்ற அளவில் வர்த்தகமானது.

இது நேற்று மூடப்பட்ட 3.9615/9670 அளவுடன் ஒப்பிடுகையில் சிறிய மாற்றமாகும். இது கடந்த மே 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு பதிவான வலுவான நிலையாகும். 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலர் மேலும் பலவீனமடைந்து வரும் நிலையில் இன்று ரிங்கிட் தொடர்ந்து உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக முவாமலாட் மலேசியா பெர்ஹாட் வங்கி நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் மொஹ்த் அஃப்சானிசம் அப்துல் ரஷீத் தெரிவித்தார்.

“நாணய சந்தையில் ஜப்பான், அமெரிக்க அதிகாரிகள் தலையீடு செய்யக்கூடும் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளதன் விளைவாக ஜப்பான் யென், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுவாக உயர்ந்துள்ளது.

“அதே நேரத்தில், தங்கத்தின் உடனடி விலை 1.04 சதவீதம் உயர்ந்து, ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு அமெரிக்க டாலர் 5,060.64 ஆக உள்ளது. இவை அனைத்தும் அமெரிக்க டாலரை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 0.57 சதவீதம் சரிந்து 97.040-ஆக  உள்ளது,” என அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

நேற்று ரிங்கிட் உயர்வு போக்கைத் தொடர்ந்துள்ள நிலையில், அமெரிக்க டாலர் பலவீனமாக இருக்கும் சூழலில் இன்று ஆசியாவின் சிறந்த நாணயமாக ரிங்கிட் உயர்ந்துள்ளது; மேலும் உயர வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும் உலக வட்டி விகித மாற்றங்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் இறுதியில் ரிங்கிட்டின் இந்த வலிமையைச் சோதிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ரிங்கிட்டின் இந்த வலுவான உயர்வு 2018-க்குப் பிறகு மலேசியாவின் நம்பிக்கையை மீண்டும் உயர்த்தியுள்ளது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset