நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மொத்த விற்பனை சந்தையான பாசார் போரொங்கில் சட்டவிரோத வியாபாரம்: கோலாலம்பூர் மாநகராட்சி அமலாக்கத்தினர் அதிரடி நடவடிக்கை 

கோலாலம்பூர்,

கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையான பாசார் போரோங் பகுதியில் வெளிநாட்டவர்கள் மேற்கொண்ட உரிமமற்ற வணிக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) கடுமையான அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு, 21 வணிகப் பொருட்களைப் பறிமுதல் செய்து இடமாற்றம் செய்துள்ளது. இதனுடன், சட்ட மீறலில் ஈடுபட்ட பலருக்கு அபராத அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஜனவரி 5 முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், உரிமம் இன்றி இயங்கிய மொத்த வணிகக் கடைகள், உணவகங்கள், காய்கறி, பழ வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மீன், கோழி, இறால், காய்கறிகள், பழங்கள், வணிக உபகரணங்கள் அனைத்தும் கோலாலம்பூர் மாநகராட்சி அமைப்பிடத்திற்கு (DBKL) அனுப்பப்பட்டன.

சட்ட ஒழுங்கை உறுதி செய்ய, இந்த பகுதிகளில் அமலாக்க நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

- கிரித்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset