நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

"விஜய்யுடன் நடித்துவிட்டேன். அடுத்து அஜித் படத்தில் நடிப்பதுதான் எனது இலக்கு," என்கிறார் 'பிகில்' அம்ரிதா

சமூக ஊடகங்களில் இவரை மில்லியன் கணக்கானோர் பின்தொடர்கின்றனர். வசிப்பது பெங்களூரில்  என்றாலும் தமிழில் சரளமாகப் பேசுகிறார்.

‘லிப்ட்’ படத்தில் பிக்பாஸ் கவினுடன் இணைந்து நடித்த பின்னர் சுந்தர்.சி.யின் ‘காபி வித் காதல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்ரிதா. இப்படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போது படக்குழுவில் உள்ள பலர் அம்ரிதாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினர்.

இந்தப் படத்துக்காக இவரை சிபாரிசு செய்தது பட நாயகர்களில் ஒருவரான ஜெய் தானாம். முன்னணி நடிகர் எனும் பந்தா இல்லாமல் தம்முடன் இயல்பாகப் பேசியதாகச் சொல்கிறார்.

"படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் நான் ஜெய்யை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த பலரும், உண்மையாகவே நான் அவரை அடித்துவிட்டதாகக் கருதுகின்றனர். வாய்ப்பு பெற்றுத் தந்தவரை யாராவது தாக்குவார்களா?

Amritha Aiyer's dance tribute to Thalapathy Vijay | Tamil Movie News -  Times of India

"அது நிஜ அடி அல்ல. விரல்கள் மட்டும் கன்னத்தைத் தொட்ட மாதிரி இருக்கும். ஜெய்யை நேரில் சந்தித்தபோது, நீண்ட நாள் பழக்கமான நண்பரைப் போல் தெரிந்தார். முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஜாலியாக சிரித்துப் பேசி, நீண்ட நாள் பழக்கமானவர் மாதிரி பேசினார்.

"நடிக்கும்போது நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். காட்சிகள் யதார்த்தமாக இருக்க எனக்காக அவர் அக்கறையுடன் பேசியது பிடித்திருந்தது. அதேபோல் மற்ற கலைஞர்களும் நல்லவிதமாக நடந்து கொண்டனர்.

"அதேபோல் நடிகர் ஜீவாவுடன் பேசிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்னைப் போல் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஜெய், ஜீவா போன்ற அனுபவ நடிகர்களுடன் இணைந்துப் பணியாற்றும் அனுபவம் முக்கியம். இந்த மாதிரியான நினைவுகள் காலங்கள் கடந்து மனதுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுக்கும்," என்கிறார் அம்ரிதா.
சுந்தர்.சி.யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து?

"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் முதல் நாள் படப்பிடிப்பில் பயந்துவிட்டேன். மூத்த இயக்குநர் என்பது ஒரு பக்கம் எனில் முதல் நாளே ஒன்றரைப் பக்கங்களுக்கு நீண்ட வசனத்தை கொடுத்து நடிக்கச் சொல்லிவிட்டனர்.

"‘காபி வித் காதல்’ படத்தில் கலகலப்புக்குக் குறைவிருக்காது. ஆனால் முதல்நாள் படப்பிடிப்பின்போது நான் பேய் அடித்த மாதிரி மிரண்டு போயிருந்தேன். என்னால் அந்த வசனத்தை மனப்பாடு செய்து உடனுக்குடன் பேசி நடிக்க முடியும். இந்த நம்பிக்கை இருந்தாலும் பெரிய இயக்குநர் முன் சரியாகப் பண்ணவேண்டும் என்ற சின்ன அழுத்தம் இருந்தது.

"ஆனால் சுந்தர்.சி சார் படக்குழுவில் உள்ள ஒவ்வொருடமும் அன்பாகப் பழகுவார். படப்பிடிப்பாக இருக்கட்டும் அல்லது நிகழ்ச்சியாக இருக்கட்டும், அனைவருக்கும் உரிய மரியாதை தருவார்," என்று சுந்தர்.சி. புராணம் பாடுகிறார் அம்ரிதா.

Coffee With Kadhal Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News  & Videos | eTimes

சமூக ஊடகங்களில் இவரைப் பின்தொடரும் ரசிகர்களில் பலர் அஜித்துடன் எப்போது நடிக்கப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்கிறார்களாம். தாம் அதற்கு தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.

"அஜித் சாருடன் நடிக்க யாருக்குதான் ஆசை இருக்காது. ரசிகர்களைப் போன்றே நானும் அத்தகைய வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக நடிப்பேன்," என்கிறார் அம்ரிதா.

'பிகில்' படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்தபோது எத்தகைய உடற்கட்டுடன் காணப்பட்டாரோ, அதேபோன்றுதான் இப்போது காட்சியளிக்கிறார். ஒருநாள் விடாமல் உடற்பயிற்சி செய்வதுதான் தமது கட்டுடலின் ரகசியம் என்கிறார்.

"தினமும் எதை மறந்தாலும் ஜிம்முக்கு செல்வதை மட்டும் மறக்கமாட்டேன். பள்ளி, கல்லூரி நாள்களில் இயன்றவரை விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொள்வேன். அந்தப் பழக்கத்தால் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் துடிப்பாகவும் செயல்பட முடிகிறது. அதேபோல் பணிச் சுமை இருந்தாலும் நடனப் பயிற்சியில் தவறாமல் ஈடுபடுவேன்.

"உணவுக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. பிடித்த உணவு வகைகள் அனைத்தையும் வயிறார சாப்பிடுவேன். அதற்கு ஈடாக கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்வதால் உடல் பெருக்கவில்லை," என்று ரகசியம் உடைக்கிறார் அம்ரிதா.

தொடர்புடைய செய்திகள்

+ - reset