நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

டில்லியில் நடைபெற்ற விருது விழாவில் சிவ ஸ்ரீ யோகேஸ்வர சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்

கோலாலம்பூர்:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு ஆதரவுடன் டில்லியில் Constitution Club Of India ஏற்பாட்டில் நடைபெற்ற  நிகழ்வில் World Educationl Achievement Award விழாவில் நமது நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலாலய நிறுவனத்தின் உரிமையாளர் சிவ ஸ்ரீ யோகேஸ்வர
சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டில் மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் ஆசிரியர் திருஞானத்திடம் முறையாக சிற்ப ஆகமங்களை பயின்று மலேசியாவில் சிற்ப கலாலயம் என்ற நிறுவனத்தை நிறுவி பல்வேறு சிற்ப வேலைகளையும், ஆலய வழிபாடுகளையும் இவர் செய்து வருகிறார்.

இவர் அண்மையில் புன்சாக் அலாம்  சிவனாலயம், பூச்சோங்  அம்மன் ஆலயம் ஆகி முழுமையாக கருங்கல்லால்  இவரது நிறுவனமே ஏற்று நடத்தி வருகிறது. 

தமிழ்நாட்டில்  பூங்குன்றம், சித்தூர், ஆவடி போன்ற இடங்களில் கருங்கல் இவர் ஆலயங்கள் அமைத்து வருவதோடு நம் நாட்டினர் பெயர் விளங்க செய்திருக்கிறார். 

இவ்வேளையில் கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தமைக்கு அவருக்கும் அவர்தான் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset