நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மஇகா வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று அக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.

இத் தேர்தலில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்கள் கடந்த ஈராண்டுகளாக தங்களின் தொகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்தலில் மஇகாவை பிரதிநிதித்து போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அப் பட்டியல் தேசிய முன்னணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மஇகா தேர்வு செய்த வேட்பாளர்களை தேசிய முன்னணி ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அதே வேளையில் இந்த வேட்பாளர்களை தேசிய முன்னணி தலைவர் விரைவில் முறைப்படி அறிவிப்பு செய்வார் என்று அவர் கூறினார்.

15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட மஇகா கூடுதல் தொகுதிகளை கோரியுள்ளது.

அது குறித்தும் தேசிய முன்னணித் தலைவர் விரைவில் அறிவிப்புகளை செய்வார் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset