நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 25ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி: விமரிசையாக நடைபெற்றது

செமினி:

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 25 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில்  தற்போது 420 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 30 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு சார்பில் அவரின் சிறப்பு அதிகாரி கண்மணி பெரியண்ணன்,  மற்றொரு சிறப்பு அதிகாரி தேவனும் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியை காண அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

காஜாங் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பிரேம் இந்த விளையாட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சரண் பாபு,  பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் ஜோன்சன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெயபாலன், கிராமத் தலைவர் நடேசன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சிலாங்கூர் மாநில அரசு சார்பில் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு 60,000 வெள்ளியை பெற்றுத் தந்துள்ளார். 

இந்த வேளையில் அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பள்ளித் தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் தமது உரையில் குறிப்பிட்டார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சரண் பாபு தமது உரையில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி அனைத்து வகையிலும் சிறந்து விளங்குவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset