நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்காளர்களை மீண்டும் தேசிய முன்னணிக்குக் கொண்டு வருவேன்: தாஜுடின் அப்துல் ரஹ்மான் சூளுரை 

கோலாலம்பூர்: 

வாக்காளர்களை மீண்டும் தேசிய முன்னணிக்குக் கொண்டு வருவேன் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் சூளுரைத்தார் 

நடப்பு எதிர்கட்சி தரப்புக்கு ஆதரவாக உள்ள தேசிய முன்னணி ஆதரவாளர்கள், வரும் காலங்களில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருக்க முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அவர் சொன்னார் 

70 விழுக்காட்டிற்கும் மேலான வாக்காளர்கள் அம்னோவிற்கு ஆதரவாக உள்ளனர். ஆக, பாசீர் சாலாக் பகுதியில் அம்னோ வலிமை மிக்க கட்சியாக உள்ளதாக அவர் சொன்னார் 

பாசீர் சாலாக் நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி கைப்பற்ற அயராது பாடுபடுவேன். அடுத்த தேர்தலில் தேசிய முன்னணி பாசீர் சாலாக்கில் மகத்தான வெற்றிப்பெறும் என்று அவர் கோடிக்காட்டினார். 

கடந்த 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய கூட்டணியிடம் தேசிய முன்னணி 5003 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset