நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி, விளையாட்டுத் துறையில் சாதிக்க மஇகா, எம்ஐஇடி உறுதுணையாக இருக்கும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கிள்ளான்:

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி, விளையாட்டுத் துறையில் சாதிக்க மஇகா, எம்ஐஇடி தொடர்ந்து  உறுதுணையாக இருக்கும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

மீபாவின் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி அண்மையில் பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட அணிகள் இக் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றது.

இவ்வேளையில் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகள்.

தோல்வி கண்ட அணிகள் வெற்றிக்காக தொடர்ந்து போராட வேண்டும்.

இந்நிலையில் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு மஇகா, எம்ஐஇடி சார்பில் 1 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் தான் இந்நிதி வழங்கப்பட்டது.

இப்படி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி, விளையாட்டுத் துறையில் சாதிக்க மஇகா, எம்ஐஇடி தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset