நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பதவிக் காலம் முடியும் வரை சிலாங்கூரில் தான் இருப்பேன்: அமிரூடின்

ஷாஆலம்:

தவணைக்கான பதவிக் காலம் முடியும் வரை சிலாங்கூரில்தான் இருப்பேன்.

சுங்கைதுவா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை அறிவித்தார்.

சமீபத்தில் பல்வேறான செய்திகள் ஊகங்களாக வெளி வருகின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.

மாட்சிமை தங்கிய சுல்தான் எனக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் அந்த ஆலோசனையை மக்களுக்கு சொல்கிறேன்.

பொருளாதாரத்தின் நிலைத்தன்மை, சிலாங்கூரின் ஒற்றுமை அரசாங்கத்தையும் உறுதி செய்வதற்காக இந்த பதவிக் காலம் முடியும் வரை நான் சிலாங்கூரில்தான் இருப்பேன் என்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset