நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ப. இராமு அறக்கட்டளையின் புதுக்கவிதை தொகுப்புக்கு படைப்பாளர்கள் கவிதைகளை அனுப்பலாம்

கோலாலம்பூர்:

ப. இராமு அறக்கட்டளையின் புதுக்கவிதை தொகுப்புக்கு படைப்பாளர்கள் தங்களின்  கவிதைகளை அனுப்பலாம்.

அறக்கட்டளையின் தலைவர் விஜயராணி இதனை கூறினார்.

இளம், புதிய கவிஞர்களை உருவாக்கும் நோக்கில் புதுக்கவிதை தொகுப்பு நூலை ப. ராமு அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது.

தற்போது அதன் இரண்டாவது நூல் தொகுப்புக்கு கவிதைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மலேசியர்கள் அனைவரும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம்.

விரும்பிய தலைப்புகளில் ஒன்றிலிருந்து இரண்டு (1-2)  பக்கங்களில் கவிதை எழுதப்பட்டிருக்க  வேண்டும். ஒருவர் இரண்டு கவிதைகள் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

ஏற்கெனவே எழுதிய அல்லது புதிதாக எழுதிய கவிதைகளை அனுப்பலாம். ஆனால் அவை அச்சிடப்பட்டு, வெளியிடப்படாதவையாக  இருக்க வேண்டும்.

கவிதையுடன் சுய விவரக்குறிப்பு, புகைப்படம் (அரைப்படம்) முகவரி, தொடர்பு எண் ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கவிதைகள் தனிமனிதச் சாடலாகவோ சமய, இன, அரசியல் அவதூறு கூறுகளைக் கருப்பொருளாகக் கொண்டவையாகவோ இருக்கக் கூடாது.

கவிதைகளைக் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு வழியில் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கவிதைகளை puthukavithai22@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாக அல்லது 014-9034536 என்ற எண்ணுக்கு வாட்சாப் அனுப்பலாம்.

தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைகள் மட்டுமே தொகுப்பில் இடம்பெறும்.
 
அனுப்பி வைக்கப்படும் கவிதைகளில் தேவைக்கேற்ற திருத்தங்கள் செய்து பின்னர் அவற்றைத் தொகுப்பில் சேர்த்து வெளியிட ஏற்பாட்டுக் குழுவிற்கு முழு உரிமை உண்டு என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset