நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் கவுண்டர் செட்டிங் முதலைகள் இன்னும் செயல்படுவதாக ஆதாரங்கள் கூறுகின்றன

சிப்பாங்:

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் கவுண்டர் செட்டிங் முதலைகள் இன்னும் செயல்படுவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மூலம் அந்நிய நாட்டினரை அழைத்து வரும் கவுண்டர் செட்டிங் முதலைகளின் முக்கிய மூளையாக இருந்தவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக எம்ஏசிசி வலியுறுத்தி உள்ளது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட முதலைகள் வேறு ரூபங்களில் வெவ்வேறு வழிமுறைகளில் இன்னும் விமான நிலையத்தில் செயல்பட்டு வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

அவர்களை பற்றி நன்கு தெரிந்த ஓர் ஆதாரத்தின்படி, அவர்களின் செயல்பாட்டில் சிறிய வித்தியாசம் உள்ளது.

இந்த விவகாரம் வெடித்த பிறகு அதிகாரிகள் கவுண்டரில் இருக்கும் போது கைத்தொலைபேசியை பயன்படுத்துவதை உள்துறை அமைச்சு தடை விதித்தது.

இதனால் அதிகாரிகள் இப்போது நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கடப்பிதழின் கடைசி நான்கு இலக்கங்களை  கவுண்டர் செட்டிங் மூலம் காகிதத்தில் எழுதுகிறார்கள். 

அதை யாராலும் அவ்வளவு எளிதாகக் கண்டறிய முடியாது.

கவுண்டருக்குள் நுழைந்தவுடன், பாஸ்போர்ட் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை சரிபார்த்து  அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset