நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம்

சிங்கப்பூர்:

இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்புகளில் ஒன்றாக செயல்படும் நாகப்பட்டினம் சங்கம் (சிங்கப்பூர்) தன் ஆண்டிறுதி பொதுக் கூட்டத்தை சங்கத்தின் தலைவர் ஹாஜி எஸ்.ஜெகபர் சாதிக் தலைமையில் இந்திய முஸ்லிம் மரபுடமைகளில் ஒன்றான அப்துல் கபூர் பள்ளிவாசலில் நடைபெற்றது.

17ஆம் நூற்றாண்டிலிருந்து சிங்கப்பூர், மலாயாவில் குடியேறியவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் இருந்தனர். அனைத்து தரப்பு மக்களும் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்தனர். அவ்வாறு பயணித்தவர்களில் பலர் சிங்கப்பூரை தங்கள் தாயகமாக்கிக் கொண்டனர். 
 
1960 களில் சிங்கப்பூரில் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அறியப்படுகிற சங்கம், முஸ்லிம் ஜமாஅத் நாகப்பட்டினம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. 

May be an image of 11 people, people standing, people sitting and indoor
 
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 1000 பேர் கொண்ட சுமார் 250 குடும்பங்கள் சிங்கப்பூரில் தற்போது வசித்து வருகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. அவர்களில், தேசத்தின் வளர்ச்சிக்காக நன்கு அறியப்பட்ட அடித்தளத் தலைவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர் என்று பலர் உள்ளனர்.

ஸ்டாம் ஃபோர்ட் ராபிள்ஸ் காலத்தில் தமிழக மக்கள் சிங்கப்பூர் வந்து குடியேற துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினத்தார் பல்வேறு சமூக பங்களிப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டனர். 

கடந்த 2019இல் நாகப்பட்டினம் சங்கம் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் அம்மாவட்டத்தைச் சார்ந்தோர் அனைவரையும் உள்ளடக்கி, அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதோடு வாழுகின்ற நாட்டிற்கும் பங்களிப்பு செய்து வருகின்றனர். 

ஆண்டுக் கூட்டத்தில் நாகப்பட்டினம் சங்கத்தின் செயலாளர் ஹாரூன் பிலால் ஆண்டறிக்கையை வாசித்து, சிறப்பாக நடத்தி முடித்த நிகழ்ச்சிகளையும், நடத்தவிருக்கிற புதிய நிகழ்வுகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

துணைத்தலைவர் ஆடிட்டர் சலாஹுத்தீன், சங்கம் எதிர்நோக்கும் அறைகூவல்களை எடுத்துக்கூறி அதனை எதிர்கொள்ளவும் தீர்வு காணவும் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க கேட்டுக்கொண்டார். 

சங்கத்தின் பொருளாளர் ஜியாவுத்தீன் ஆண்டிறுதி வரவு-செலவு கணக்குகளை முறையாக சமர்ப்பித்து பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெற்றபின் நாகப்பட்டினம் சங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. 

சங்கத்தின் ஆலோசகர் சமாதான நீதவான் திரு நிஜாமுத்தீன், சிறப்பு விருந்தினர், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் திரு முஹம்மது பிலால் வாழ்த்துரை வழங்கினர். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset