நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேமரன்மலை தொகுதியை மீண்டும் கோரும் மஇகா திருப்பித் தர மறுக்கும் அம்னோ

கோலாலம்பூர்:

கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியை மஇகா மீண்டும் கோரியுள்ளது.

ஆனால் அதை திருப்பித் தர அம்னோ மறுக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த தேர்தலில் மஇகா சார்பில் சிவராஜ் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால், அவர் வாக்காளர்களை வாங்கினார் என்ற அடிப்படையில் அத் தொகுதி பறிக்கப்பட்டது.

அங்கு மீண்டும் இடைத் தேர்தல் நடந்தது.

அக் காலக்கட்டத்தில் மஇகா அத் தொகுதியை அம்னோவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பூர்வகுடி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அம்னோ சார்பில் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது 15ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை தொகுதியில் மீண்டும் போட்டியிட மஇகா முடிவு செய்துள்ளது.

ஆனால், அத்தொகுதியை திருப்பித் தர அம்னோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset