செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
பட்டர்வொர்த்:
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17ஆவது பேராளர் மாநாட்டில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த போது இந்திய சமுதாயத்திற்கு என புளூ பிரிண்ட் ஒன்றை உருவாக்கினார்.
இந்த புளூ பிரிண்ட் இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்திருக்கும்.
ஆனால் அந்த புளூ பிரிண்ட் கிடப்பில் போடப்பட்டது.
ஆக தற்போதைய அரசாங்கம் அந்த புளூ பிரிண்ட் திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
அதே வேளையில் சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்.
குறிப்பாக அவரின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு செனட்டர் உட்பட இதர அரசு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அடுத்து எஸ்எஸ்டி வரி மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. ஆக ஜிஎஸ்டி வரியை அரசாங்கம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இந்த நான்கு தீர்மானங்களும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர்களால் நிறைவேற்றப்பட்டது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 9:15 am
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்; வாக்குகளே நமது பலம்: டத்தோஸ்ரீ தனேந்திரன் பேச்சு
December 20, 2025, 3:16 pm
தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி
December 20, 2025, 12:10 pm
