நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்; வாக்குகளே நமது பலம்: டத்தோஸ்ரீ தனேந்திரன் பேச்சு

பட்டர்வொர்த்:

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் வாக்குகளே நமது பலம் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17ஆவது பேராளர் மாநாடு பட்டர்வொர்த் லைட் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் உரையாற்றிய டத்தோஸ்ரீ தனேந்திரன்,

இக்கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவை பெற்றுள்ளது.
இப்போது தான் 17 ஆண்டுகள் ஆகிறது என ஒரு சிலர் கூறலாம்.

ஆனால் இந்த 17 ஆண்டுகளில் மலேசிய அரசியல் வரலாற்றில் பல சாதனைகளை இக்கட்சி படைத்துள்ளது.

இதை யாராலும் மறுக்க முடியாது. இந்த சாதனையின் ஆதாரம் தான் இன்று அதிகமான பேராளர்கள்  மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இது மாபெரும் படை. மக்கள் சக்தி கட்சியின் படை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

இப்படை அடுத்த அரசியல் வரலாற்றில் இன்னும் பல சாதனைகளை படைக்கவுள்ளது என்று அவர் கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி இன்னும் வலுவாகி வருகிறது.

அதிகமான உறுப்பினர்கள், இளைஞர்கள், மகளிர்கள் இக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி தயாராகும்.

அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் மிகப் பெரிய பலம் நமது வாக்குகள் தான்.

இந்த வாக்குகளை பணம், பொருள் என எதற்காகவும் விட்டுத் தரக் கூடாது.

குறிப்பாக நமது வாக்குகளால் தவறான தேர்வை செய்து பின் வருத்தப்படக்கூடாது என டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்









தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset