நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்

பட்டர்வொர்த்:

விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது.

இந்த 17 ஆண்டுகளில் அக்கட்சியும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரனும் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர்.

மகிழ்ச்சியான காலக்கட்டத்திலும் சோதனையான காலக்கட்டத்திலும் டத்தோஸ்ரீ தனேந்திரன் தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.

கொஞ்சம் கூட அவர் இந்த விசுவாசத்தில் இருந்து விலகவில்லை. இது தான் ஒரு தலைவருக்கான சான்றாகும்.

இந்த விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் கட்சி உட்பட எதற்கும் தலைமையேற்க தகுதியற்றவர்கள் ஆவர்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset