நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் மற்ற இந்திய கட்சிகள் இணைவதற்கு முட்டுக் கட்டையாக இருப்பதே மஇகா தான்: டத்தோஸ்ரீ ஜாஹித் குற்றச்சாட்டு

பட்டர்வொர்த் -
தேசிய முன்னணியில் மற்ற இந்திய கட்சிகள் இணைவதற்கு முட்டுக் கட்டையாக இருப்பதே மஇகா தான்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

மலேசிய மக்கள் கட்சி உட்பட பல இந்திய கட்சிகள் தேசிய முன்னணியில் இணைவதற்கு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன.

இருந்தாலும் அக்கட்சிகள் தேசிய முன்னணியில் இணைவது குறித்து விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்க வேண்டும்.

ஆக வரும் காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுக்க சம்பந்தப்பட்ட விதிகளை மாற்றுவது குறித்து தேசிய முன்னணி ஆராய்ந்து வருகின்றது.

அதே வேளையில் சம்பந்தப்பட்ட கட்சிகள் தேசிய முன்னணியில் இணைவதற்கு முட்டுக் கட்டையாக இருப்பதே மஇகா தான்.

இதை நான் வெளிப்படையாக கூறுகிறேன் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset