நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்

பெட்டாலிங்ஜெயா:

மலேசிய கால்பந்து சங்கத்தின் குழப்பங்கள் இருந்தபோதிலும் மலேசியர்கள் பிபாவின் சிறப்பு பதவிகளை வகிக்கின்றனர்.

பிபாவின் உச்சமன்றத்தில்  ஏற்கனவே பணியாற்றும் எம்ஏஎம்மின் கௌரவத் தலைவர் டான்ஸ்ரீ ஹமிடின் தர்போது பிபா ஊடக தொடர்புக் குழுவில் பிரதிநிதியாகப் பொறுப்பேற்கப்படுகிறார்.

எப் ம்ஏஎம் துணைத் தலைவர் டத்தோ எஸ். சிவசுந்தரம் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான பிபா குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் எப்ஏஎம் மகளிர் கால்பந்துக் குழுவின் தலைவர் டத்தோ சுராயா யாக்கோப் தேசிய மகளிர் அணிப் போட்டிகளுக்கான பிபா குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய கால்பந்து சங்கம் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், இந்த நியமனங்கள் மலேசிய கால்பந்திற்கு ஒரு பெருமையான தருணத்தைக் குறிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெச்சூர் கால்பந்து லீக்கின் தலைவராகவும் பணியாற்றும் டத்தோ சிவசுந்தரம்,

இந்த நியமனத்தை மலேசிய கால்பந்தை உள்நாட்டு மட்டத்தில் வளர்ப்பதற்காக பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்கான அங்கீகாரம் என்று விவரித்தார்.

இந்த வாய்ப்புக்காக டான்ஸ்ரீ ஹமிடின், பிபாவின் தலைவர் கியானி இன்பான்டினோ இருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

இந்த நியமனம் ஒரு மரியாதை மட்டுமல்ல, கால்பந்தின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்பதற்கான பொறுப்பும் கூட என்று அவர் கூறினார்.

உள்ளூர் கால்பந்தை நிர்வகிப்பதன் மூலம் நான் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் பிபாவின் தொழில்நுட்ப மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தப் பயன்படுத்த விரும்புகிறேன்.

விஏஆர் தொழில்நுட்பத்தைப் பற்றிய எனது புரிதலை ஆழப்படுத்தவும், போட்டித் தரங்களையும் நியாயத்தையும் மேம்படுத்த மலேசிய லீக்கில் அதை எவ்வாறு திறம்பட செயல்படுத்த முடியும் என்பதை ஆராயவும் திட்டமிட்டுள்ளேன் என்று டத்தோ சிவசுந்தரம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset