நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி

பட்டர்வொர்த்:

மலேசிய மக்கள் சக்தி கட்சி ஒருபோதும் மஇகாவிற்கான மாற்று கட்சியாக இருக்காது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை உறுதியுடன் கூறினார்.

தேசிய முன்னணியில் இணைவதற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் தேசிய முன்னணியில் இணைய விரும்பும் கட்சிகளுக்கு மஇகா தான் முட்டுக் கட்டையாக உள்ளது என அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரின் குற்றச்சாட்டுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

காரணம் மஇகாவுக்கும் எங்களுக்குமான உறவு மிகவும் வலுவாக உள்ளது.

குறிப்பாக டான்ஸ்ரீ விக்னேஸ்வனுக்கும் எனக்கும் இடையிலான உறவு சொல்லி  புரிய வைக்க முடியாது.

ஆக மஇகா எப்போதும் தாய்க் கட்சி தான். அக்கட்சிக்கான மரியாதை எப்போதும் இருக்கும்.

குறிப்பாக மலேசிய மக்கள் சக்தி கட்சி மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல.

இதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset