நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்

பட்டர்வொர்த்:

இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

இந்திய சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட புளூ பிரிண்ட் (திட்ட வரைவு) கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த புளூ பிரிண்ட் திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் கோரிக்கையை முன்வைத்தார்.

அதே வேளையில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் கோரிக்கையாகவும் உள்ளது.

மக்களுக்காக சேவை, நலனில் நான் உடல் வர்ணத்தை பார்ப்பது இல்லை.

ஆக இந்த புளூ பிரிண்டில் உள்ள திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என மடானி அரசுக்கு நான் அழுத்தம் கொடுப்பேன். இது என்னுடைய வாக்குறுதி.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset