நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்

பட்டர்வொர்த்:

தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே இறுதி முடிவை எடுப்போம் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியாக மஇகா விளங்கி வருகிறது.

இருந்தாலும் அக் கட்சி தேசிய முன்னணியில் இருந்து விலகவுள்ளதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக தேசியக் கூட்டணியில் அக் கட்சி இணைவது தொடர்பான கடிதமும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருந்தாலும் மஇகாவின் நிலை குறித்து தேசிய முன்னணி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

காரணம் மஇகா இன்னமும் ஒரு நிலையான முடிவை எடுக்கவில்லை. என்னை பொறுத்தவரையில் மஇகா ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
  
இல்லையென்றால் தேசிய முன்னணியே இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும்.

இது மசீசவுக்கும் பொருந்தும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17ஆவது பேராளர் மாநாட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset