நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்

கோலாலம்பூர்:

மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை. டத்தோஸ்ரீ ஜாஹித் பேசுவது பழைய கதை.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இவ்வாறு சாடினார்.

தேசிய முன்னணியில் இணைய விரும்பும் கட்சிகளுக்கு மஇகா தான் முட்டுக் கட்டையாக உள்ளது என அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. காரணம் தேசிய முன்னணி எந்த கட்சியையும் இணைத்து கொள்ளலாம்.

இதில் மஇகாவுக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை என கட்சியின் தேசியத் தலைவர் இரண்டு வாரங்களுக்கு முன்பே டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்து விட்டார்.

ஆக டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி பேசுவது பழைய கதையாகும்.

மேலும் பழைய கதைகளை பேசி சமுதாயத்திடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset