
செய்திகள் மலேசியா
கோம்பாக் தொகுதியில் போட்டியா?: அன்வார் மறுக்கவில்லை
கோலாலம்பூர்:
எதிர்வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் தாம் கோம்பாக் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மறுக்கவில்லை.
தமக்கு கூடுதலான சாதக அம்சங்கள் உள்ள தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் கோம்பாக் தொகுதியில் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தாம் சில தொகுதிகளைப் பரிசீலித்து வருவதாகவும், இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
"உண்மையைச் சொல்வது என்றால் எந்த தொகுதி என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அது எனக்கு கூடுதல் நன்மையைத் தரும் ஒரு தொகுதியாக இருக்கும். பெரும்பாலும் துரோகிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தொகுதியாக இருக்கும்," என்றார் அன்வார் இப்ராஹிம்.
கடந்த முறை பக்காத்தான் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின்னர் மற்ற கட்சிகளுக்கு தாவியவர்களை அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
பக்காத்தான் அரசாங்கம் கவிழ காரணமாக இருந்த அஸ்மின் அலி தற்போது பெர்சாத்து கட்சியில் உள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பேராக் மாநிலம் தம்புன் தொகுதியில் அன்வார் போட்டியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இப்போது அந்த உத்தேச பட்டியலில் கோம்பாக் தொகுதியும் இடம்பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am
கம்போங் சுங்கை பாரு பிரச்சினையை வெளியாட்கள் அரசியலாக்க வேண்டாம்: ஜொஹாரி சாடல்
September 18, 2025, 9:26 am
பூலாவ் கேரியில் 1,699.68 ஹெக்டேர் நிலத்தில் சிலாங்கூரின் மூன்றாவது துறைமுகம் அமைகிறது: அமிருத்தீன் ஷாரி
September 18, 2025, 8:39 am
Mahsa பல்கலைக்கழகத்தில் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
September 17, 2025, 8:06 pm