நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக சிறப்பு நிதி; அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: குணராஜ்

பத்துமலை:

சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு உதவ சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும்

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை வலியுறுத்தினார்.

மலேசியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 50,000 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.

இப்பக்தர்கள் விமான நிலையங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.

இப்பக்தர்களின் பிரச்சினை போக்குவரத்து அமைச்சின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக், தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் முயற்சியின் அடிப்படையில் ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த சலுகை இரண்டாவது ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதே வேளையில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது அனைத்து ஐயப்ப பக்தர்களின் வேண்டுதலாக இருக்கும்.

ஆனால் நிதிப் பிரச்சினையால் அவர்களால் சபரிமலைக்கு செல்ல முடியாது.

இதனால் பத்துமலை ஐயப்ப சுவாமி தேவஸ்தானமே பல பக்தர்களை செந்த செலவில் பக்தர்களை சபரிமலைக்கு அழைத்து செல்கிறது.

ஆக இவ்விவகாரத்தை மத்திய, மாநில அரசாங்கங்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் இதுபோன்ற பக்தர்களுக்கு உதவ சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவோம்.

கேட்டால் தான் ஏதாவது தீர்வு கிடைக்கும். ஆக இம்முயற்சியும் மேற்கொள்ளப்படும்.

பத்துமலை ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் நடந்த மகா படி பூஜையில் கலந்து கொண்ட குணராஜ் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset