நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கான காப்புறுதி; சபரிமலைக்கு செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்: யுவராஜா குருசாமி

பத்துமலை:

மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கான காப்புறுதித் திட்டம் சபரிமலைக்கு செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

மலேசிய ஐயப்ப சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி இதனை கூறினார்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் இன்று மகா படி பூஜை மிகவும் சிறப்பான சிறையில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

அப்படி செல்லும் பக்தர்களுக்கு மலேசிய விமான நிலையங்களில் சிறப்பு பாதை, சலுகைகள் வழங்கப்படுகிறது.

இச்சலுகை கிடைக்க பெரும் உதவியாக இருந்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்க்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் போதுமான பணம் இல்லாததால் பலர் சபரிமலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.

ஆக இதுபோன்ற பக்தர்களுக்கு நிதி வழங்கவும் அவர்களுக்கான டிக்கெட்டை சிறப்பு விலையில் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான கோரிக்கைகளும் குணராஜ் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது.

இதற்கும் நல்ல வழி பிறக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காப்புறுதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது கட்டாயம் இல்லை என்றாலும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு இது அவசியம் என்று யுவராஜா குருசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset