நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் போலீஸாரிடம் தடையில்லா சான்று பெற புதிய முறை

புது டெல்லி:

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் காவல் துறையின் தடையில்லாச் சான்று (பிசிசி) பெறுவதற்கு இனி இணையவழி தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு காவல் துறையின் தடையில்லாச் சான்று கட்டாயமாகும்.

ஆனால், இந்தத் தடையில்லாச் சான்றிதழை வழங்குவதில் உள்ளூர் போலீஸார் அதிக அவகாசம் எடுத்துக் கொள்வதால், விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு, தடையில்லாச் சான்றை விரைந்து பெறும் வகையில் புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset