நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகப் பிரசித்திப் பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்தாவி மறைவு

இஸ்தான்புல்:

இஸ்லாமிய அறிஞர் இமாம் யூசுஃப் அல்-கர்தாவி இன்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தாவி 120 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

அவர் இஸ்லாமிய புலமைப்பரிசில் தனது பங்களிப்புகளுக்காக எட்டு சர்வதேச பரிசுகளையும் பெற்றுள்ளார்.

21ஆம் நூற்றாண்டு இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
உலகப் பிரசித்திபெற்ற அறிஞர்களான இப்னு தைமியா, இப்னு கயீம், சயீத் ரஷித் ரிதா, ஹசன் அல்-பன்னா, அபுல் ஹசன் அலி நத்வி, மௌலானா அபுல் அஃலா மௌதூதி, நயீம் சித்திக் ஆகியோர் அவரது தாக்கங்களில் அடங்குவர்.

60 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட அல் ஜசீராவில் ஒளிபரப்பான அவரது  ا”ஷரியா அண்ட் லைஃப்” நிகழ்ச்சி உலகப் பிரசித்திப் பெற்றதாகும்.

எகிப்தைச் சேர்ந்த அவருக்கு உலகெங்கும் மாணக்கர்களும் வாசகர்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset