
செய்திகள் உலகம்
இஸ்லாமியர் அல்லாதவர்களைக் "காஃபிர்" என்று கூறக்கூடாது: இந்தோனேசிய இஸ்லாமிய சமய மன்றம் அறிவிப்பு
ஜகார்தா:
இந்தோனேசியாவில் இஸ்லாமியர் அல்லாதவர்களைக் குறிப்பிடுவதற்கு "காஃபிர்" அல்லது இறைநம்பிக்கையற்றவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என அந்நாட்டின் ஆகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான Nahdlatul Ulama வலியுறுத்தி உள்ளது.
அரசு - மற்றும் குடியுரிமை சார்ந்த விஷயங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்களை "காஃபிர்" என்று குறிப்பிடுவதற்கு அந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தோனேசியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மதம் சார்ந்த பதற்ற நிலையை தணிக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Nahdlatul உலாமா அமைப்பில் சுமார் 140 இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் அந்த அமைப்பு மேற்குறிப்பிட்ட கருத்தை வெளியிட்டது. மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு அரசு விவகாரங்களில் சம பொறுப்பும் மதிப்பீடும் உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியது.
மேலும், "இஸ்லாமியர் அல்லாதவர்கள் இனி 'முவாதின்' (muwathin) அல்லது இந்தோனேசிய முஸ்லீம்களைப் போன்று சம உரிமைகள், கடமைகள் கொண்ட குடிமக்கள் என்றே குறிப்பிடப்பட வேண்டும்," என Nahdlatul உலாமா அமைப்பின், கிழக்கு ஜாவா உலாமாக்கள் பேரவைச் செயலாளர் அஹ்மத் முன்தாஹா Ahmad Muntaha குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறி்க்கையானது அக் குழுவின் இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் எத்தகைய சமூகச் சூழலிலும் இஸ்லாமியர் அல்லாதவர்களை “kafir” என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் குறிப்பிடக்கூடாது என அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், இந்தோனேசியா என்பது ஒரு நாடாக இஸ்லாமியர்களால் மட்டும் நிறுவப்படவில்லை என இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm