நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா

நியூயார்க்: 

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இந்த தீர்மானத்தை ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 116 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்பட 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழாது எனக் கூறி இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset