செய்திகள் உலகம்
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் அங் மோ கியோவில் (Ang Mo Kio) 5 பூனைகளைக் கொடுமைப்படுத்திய ஆடவருக்குச் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலில் அவருக்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்தபின் சிறைத்தண்டனை 27 மாதமாக உயர்த்தப்பட்டது.
33 வயது பேரி லின் பெங்லி (Barrie Lin Pengli) வாழ்க்கையில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் பூனைகளைத் தேடித் துன்புறுத்தினார்.
அங் மோ கியோவிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருக்கும் பூனைகளைச் சித்தரவதை செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பூனைகளை எட்டி உதைத்து, அவற்றைப் பிடித்து மூச்சுவிட முடியாத அளவுக்குப் பைகளுக்குள் அடைத்து எங்காவது கொண்டு போய் விடுவார்; அல்லது கொன்றுவிடுவார்.
2 பூனைகளை அவர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (HDB) உயரமான மாடியிலிருந்து வீசினார். கண்காணிப்புக் கேமராவில் அது பதிவானது.
கீழே வீசிய பூனை உயிருடன் இருப்பதைக் கண்டு அதனை அவர் காலால் மிதித்துக் கொன்றார்.
அவரது செயல் கொடூரமானது என்பதால் கடுமையான தண்டனையை விதித்து அதுபோல் செய்ய நினைப்பவர்களுக்கு அது பாடமாக அமைய வேண்டும் என்று அரசாங்கத்தரப்பு கேட்டுக்கொண்டதால் அவரது சிறைத்தண்டனை 27 மாதமாக உயர்த்தப்பட்டது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 4:24 pm
பாங்காக்கில் கொதிக்கும் வெப்ப அச்சுறுத்தல்
June 25, 2026, 2:54 pm
கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு ஈரானிடமே தொடரும்: காலிபாஃப் அதிரடி அறிவிப்பு
June 22, 2026, 5:14 pm
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகினார்
June 22, 2026, 4:48 pm
18 மணி நேர தீவிர பேச்சுவார்த்தை நிறைவு: அமெரிக்கா–ஈரான் சந்திப்பில் புதிய திருப்பம்
June 22, 2026, 3:26 pm
