நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா

பீஜிங்:

74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவு விசா இல்லாமல் சுற்றுலா வர சீனா அனுமதித்துள்ளது.
சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளர்த்தியுள்ளது. அந்த 74 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் 30 நாள்கள் வரை விசா இன்றி சீனாவில் தங்கலாம்.

சுற்றுலாத் துறை, பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா இதை செய்கிறது.

2023ம் ஆண்டு டிசம்பரில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லா நுழைவை சீனா அறிவித்தது.

China expands visa-free travel to 74 countries, Africa left out | Africanews

அதன் பின்னர் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் கடந்த மாதம் இதற்கு தகுதி பெற்றன.

பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டன. ஜூலை 16ம் தேதி அஜர்பைஜானும் சேர்க்கப்படவுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இடம் பெறவுள்ள நாடுகளின் எண்ணிக்கை 75ஆ உயர்ந்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset