செய்திகள் மலேசியா
தங்கள் குடியிருப்பைவிட்டு வேறு குடியிருப்புப் பகுதியில் மெதுவோட்டம்: 8 பேருக்கு அபராதம்
கோலாலம்பூர்:
தாங்கள் குடியிருக்கும் பகுதியை விட்டுவிட்டு பிற குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று மெதுவோட்டத்தில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய புகாரின் பேரில் உலுக் கிள்ளாங் போலிசார் 8 தனிநபர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான நடவடிக்கையின்போது அங்கு மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டை சோதிக்கப்பட்டதாகவும், மெதுவோட்டம் மேற்கொண்ட பகுதியின் முகவரியும் அடையாள அட்டையில் உள்ள முகவரியும் ஒத்துப்போகவில்லை என்றும்் போலிசார் சுட்டிக் காட்டியுள்ளனர்.
"அமலாக்க அதிகாரிகள் அடையாள அட்டையையும் மெதுவோட்டம் மேற்கொள்ளும் இடத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஒருவேளை அருகில் உள்ள வேறு குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
"தாங்கள் குடியிருக்கும் பகுதியை விட்டு அருகில் உள்ள வேறு இடங்களுக்குச் சென்று மெதுவோட்டத்தில் ஈடுபடுவது SOPகளுக்கு எதிரான ஒன்று," என்று அம்பாங் ஜெயா காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 9:39 am
விசுவாசம் பதிவு தொடர்பாக ஃபிர்தாஸ் வோங் மீது கணபதிராவ் வழக்குத் தொடர்ந்தார்
October 9, 2026, 9:18 am
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிரதமர் இன்று மாலை மக்களவையில் தாக்கல் செய்வார்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
