நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்:  மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல் 

ஜொகூர் பாரு- 

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் சுமார் 70 விழுக்காடு வரை வாக்குகள் பதிவாகும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் ஆருடம் தெரிவித்துள்ளது 

பிரச்சாரக் காலம் முழுவதும் கிடைத்த வரவேற்பின் அடிப்படையிலும், வாக்காளர்களாகத் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஶ்ரீ ரம்லான் ஹருன் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த ரம்லான், விறுவிறுப்பான பிரச்சாரக் காரணியைத் தவிர, தேர்தல் செயல்முறையின் முக்கியத்துவம் குறித்த மக்களின் விழிப்புணர்வும் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஒரு வினையூக்கியாக இருந்தது என்றார்.

ஜொகூர் மாநில தேர்தலில் 2.7 மில்லியன் தகுதி பெற்ற வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ளவுள்ளனர் 

ஜொகூர் மாநிலம் முழுவதும் 176 வாக்கு மையங்களும் 4,889 வாக்குச்சாவடிகளும் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

தேர்தல் நேரங்களில் 43,036 அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் பணியில் இருப்பார்கள் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset