செய்திகள் மலேசியா
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
ஜொகூர்பாரு:
எல்ஆர்டி 3 திட்டம் செயல்வடிவம் பெற்றதால் தான் டத்தோஸ்ரீ நஜிப்பின் உணர்வுகள் தற்போது வெளிப்பட்டுள்ளன.
முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விவகாரத்துடன் தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
இதற்கு எல்ஆர்டி திட்டம் தொடர்பான விவாதத்தை எதிர்க்கட்சிகள் கட்டுப்படுத்தத் தவறியதாலேயே ஏற்படுகின்றன.
அரசாங்கம் சமீபத்தில் எல்ஆர்டி செயல்பாட்டைத் தொடங்கி வைத்திருந்தபோதிலும், பொதுமக்களின் கவனம், குறிப்பாக சமூக ஊடகங்களில், இத்திட்டத்தைத் தொடங்கியதற்காக நஜிப் நிர்வாகத்தைப் பாராட்டுவதிலேயே அதிகமாக இருந்தது என்று அவர் கூறினார்.
நான் செய்திகளை அதிகம் படிப்பதில்லை, கருத்துகளைப் படிக்கிறேன். பெரும்பாலான கருத்துகள் தற்போதைய பிரதமருக்கு நன்றியை வெளிப்படுத்தவில்லை என்பதை நான் காண்கிறேன்.
மாறாக, நான் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு நன்றியைத் தெரிவிக்கிறேன், நன்றி பாஸ், என்று ஜொகூரில் தேசிய முன்னணி பிரச்சாரத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
