நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

LINDUNG 24 JAM திட்டத்திலிருந்து வெளியேறுபவர்கள்  இனிமேல் சொக்சோ அல்லது முதலாளிகளை குறை சொல்லக் கூடாது: டத்தோ அஸ்மான்

கோலாலம்பூர்:

பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்பு திட்டத்தில் பங்களிக்க விரும்பாத ஊழியர்கள், திங்கட்கிழமை முதல் இணையவழியில் இத்திட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

பெர்கேசோவின் தலைமை முறை அதிகாரி, டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் இதனை கூறினார்.

அவ்வாறு செய்ய விரும்பும் ஊழியர்கள் விண்ணப்பத்தின் ஒரு நிபந்தனையாக, பொறுப்பு விலக்குச் சான்றிதழ் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அந்தச் சான்றிதழில் கையெழுத்திட்ட பிறகு, வேலை நேரத்திற்கு வெளியே நிகழும் எந்தவொரு விபத்துகள், காயங்கள் அல்லது மரணங்களுக்கும் பெர்கேசோவுக்கும் முதலாளிகளும் இனி பொறுப்பல்ல.

இந்தத் திட்டத்திலிருந்து விலக விரும்பும் எவரும், நாங்கள் பொறுப்பு விடுவிப்புச் சான்றிதழாகக் கருதும் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.

எனவே, இந்தப் பொறுப்பு விடுவிப்புச் சான்றிதழ் வழங்கப்படும்போது பெர்கேசோ அல்லது வேலையளிப்பவர் பொறுப்பேற்க மாட்டார்கள்.

இதன் பொருள், வேலை நேரத்திற்கு வெளியே நிகழும் விபத்துகள், காயங்கள் மற்றும் மரணங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதாகும்.

எனவே, இனிமேல் பெர்கேசோவையோ அல்லது வேலையளிப்பவரையோ குறை கூறாதீர்கள் என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கடந்த புதன்கிழமை, 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது இனி கட்டாயமில்லை.

அதற்குப் பதிலாக உடனடியாகத் தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset