செய்திகள் மலேசியா
தினமும் 12 ஆயிரம் பயண விண்ணப்பங்களுக்கு அனுமதி: உள்துறை அமைச்சு
புத்ராஜெயா:
MCO 3.0 அமலில் இருக்கும் இவ்வேளையில் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள தினம்தோறும் 12 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 1ஆம் தேதி முழு முடக்கநிலை அறிவிக்கப்பட்டது முதல் இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சிர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதின் தெரிவித்துள்ளார்.
இறப்பு, அவசரநிலை, சுய தொழில் செய்வோரிடமிருந்து தான் அதிக விண்ணப்பங்கள் வருவதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். மேலும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பயணம் மேற்கொள்ள, பலர் பயன்படுத்தி வந்த 118 உள்வழிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டபோது நாள்தோறும் 1.3 மில்லியன் வாகனங்களை சாலையில் காணமுடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்த எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்துள்ளது என்றார்.
MCO 3.0 காலகட்டத்தில் காவல்துறையும் சம்பந்தப்பட்ட முகமைகளும் இணைந்து நாடு முழுவதும் 85 ஆயிரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன்வழி 35 ஆயிரம் கட்டடங்களில் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பேரங்காடிகள் , உணவகங்கள், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதின் SOPகளை மீறியதாக இதுவரை 3,514 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 163 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 12:44 pm
நிராகரிக்கப்பட்ட காதலால் ஐரீன் சோபியா இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்: போலிஸ்
October 9, 2026, 12:29 pm
தீபகற்ப மலேசியாவின் தென்பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 9, 2026, 12:15 pm
உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்
October 9, 2026, 12:13 pm
ஐரீன் சோபியா கொலை வழக்கு: 16 வயது சிறுவனின் காவல் நாளை முதல் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது
October 9, 2026, 9:39 am
விசுவாசம் பதிவு தொடர்பாக ஃபிர்தாஸ் வோங் மீது கணபதிராவ் வழக்குத் தொடர்ந்தார்
October 9, 2026, 9:18 am
