செய்திகள் மலேசியா
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
டிலி:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மை எக்ஸ்போ டிலி 2.0, டிலியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இது திமோர்-லெஸ்டேயின் வளர்ந்து வரும் நிகழ்வுகள், சுற்றுலாத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிகழ்வில், வெளியுறவுத் துறை துணையமைச்சர் ஜெஸ்வினா கோமஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.
அவருடன் பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வத் தலைவர்கள் மற்றும் தூதர்களும் கலந்துகொண்டது இந்தக் கண்காட்சியின் சர்வதேச முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
டிலியில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் ஜெமிமா உஜாங்கின் முக்கிய முயற்சி, தளராத ஆதரவிற்கு மை இவென்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி டைலான் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் அவர் டத்தோ அனுவார் நூர்டின், வெஸ்ட் ஸ்டார் ஏவியேஷன் சர்வீசஸ், ஹைரி, மலேசியா ஜகார்த்தா சுற்றுலாத்துறை, மிம்கோய்ன், அத்துடன் பத்தேக் ஏர் (அதிகாரப்பூர்வ விமான நிறுவனம்), ஹோட்டல் திமோர் (அதிகாரப்பூர்வ ஹோட்டல்), டெல்காம்செல் (அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவனம்) உள்ளிட்ட முக்கிய நிகழ்வு கூட்டாளர்களுக்கும் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்தார்.
தொடக்க விழாவின் போது ஒரு முக்கிய அறிவிப்பில், மை இவென்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் டிலியில் தனது தலைமையக செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக அமைக்கிறது என்று டைலான் வலியுறுத்தினார்.
மை இவென்ட்ஸ் இன்டர்நேஷனல், திமோர் அரசாங்கத்துடன் கைகோர்த்து, எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச நிகழ்வுகளைக் கருத்தாக்கம் செய்யவும், நிர்வகிக்கவும், செயல்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இங்கு திமோர்-லெஸ்தே மீதான எங்கள் நீண்ட கால அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளை டிலிக்குக் கொண்டு வருவதன் மூலம், பிராந்திய வர்த்தகம், சுற்றுலா, கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான ஒரு துடிப்பான மையமாக இந்த நாட்டை நிலைநிறுத்த நாங்கள் உதவ விரும்புகிறோம் என்று டைலான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
