செய்திகள் மலேசியா
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
ஜொகூர் பாரு-
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் நாளன்று மழை, இடிமுழக்கம் ஏற்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
காலை வேளையில் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு, பத்து பஹாட், கூலாய், மூவார், பொந்தியான் மற்றும் தங்காக் ஆகிய பகுதிகளில் மழை வரும்
இந்நிலையில் மாலை வேளையில் மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் மழை எதுவும் பொழியாது என்று மெட் மலேசியா குறிப்பிட்டது
இதற்கிடையில், குளுவாங், கோட்டா திங்கி மற்றும் செகாமட் ஆகிய பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், மெர்சிங் பகுதி பிற்பகல் முதல் இரவு வரை இதேபோன்ற வானிலையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது
பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்தபட்சம் 23 பாகை செல்சியஸ் முதல் அதிகபட்சம் 33 முதல் 34 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
