செய்திகள் மலேசியா
இறைவனின் கருணை உங்கள் மீது பொழியட்டும்: 101 வயதை எட்டிய துன் மகாதீரை வாழ்த்திய பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 10ஆம் தேதி, 101வது வயதை எட்டிய மூத்த அரசியல் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நல்விரும்பிகளுடன் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“துன் டாக்டர் மகாதீர் முஹம்மது அவர்களுக்கு 101வது பிறந்தநாள் வாழ்த்துகள். இறையருளால் நீங்கள் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடனும் மிகுந்த கருணையுடனும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்,” என்று பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்) தலைவருமான அன்வார் ஒரு சுருக்கமான ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
அன்வார், மகாதீர் அரசாங்கத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றியபோது அவருடன் பகிர்ந்துகொண்ட ஒரு கலகலப்பான தருணத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை அன்வார், மகாதீர் அரசாங்கத்தில் துணைப் பிரதமராக இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சீர்திருத்த இயக்கம் ரீஃபோமாசி தோற்றம் கண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
