நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாரை விட ஓன் ஹபிஸ் அதிக செல்வாக்கு பெற்றவர்; ஜொகூரில் தேசிய முன்னணி 3/2 பங்கு இடங்களை வெல்லும்: இல்ஹாம் செண்டர்

பெட்டாலிங் ஜெயா- 
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இடங்களை வென்று மாநில அரசாங்கத்தை அமைக்கும் என இல்ஹாம் சென்டர் கணிப்பை வெளியிட்டுள்ளது. 

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பே மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான தேசிய முன்னணியின் தந்திரோபாய முடிவு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்று இல்ஹாம் மையம் கூறியது.

ஏனெனில், நாடு தழுவிய தேர்தல்கள் வழக்கமாக அதிக வாக்காளர் வருகைக்கு வழிவகுக்கும், மேலும் வெளியூர் வாக்காளர்களும் அதிக அளவில் திரும்புவார்கள்.

மாநிலத் தேர்தலில் வாக்காளர்கள் ஆளும் மாநில அரசின் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அதேசமயம் பொதுத் தேர்தலில் தேசிய உணர்வுகளே சூழலில் மேலோங்கி இருப்பதாகவும் அது கூறியது

"மாநிலத் தேர்தலைத் தனியாக நடத்துவது, மத்திய அரசுக்கு எதிரான எண்ணங்களால் அதிக சுமைக்கு ஆளாகாமல், ஆளும் மாநில அரசு என்ற தனது சாதகத்தைப் பயன்படுத்திக்கொள்ள BN-க்கு இடமளிக்கிறது," என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.

அதன் பகுப்பாய்வின்படி, BN 39 இடங்களிலும், பக்கத்தான் ஹரப்பான் ஒன்பது இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன, அதே நேரத்தில் மற்ற எட்டு இடங்களில் கடும் போட்டி நிலவும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset