செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி நீடிக்க வாக்காளர்கள் நாளை சிறந்த முடிவை எடுக்க வேண்டும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி நீடிக்க வாக்காளர்கள் நாளை சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 2 வாரம் அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு பின் மக்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்.
வாக்களிக்க செல்லும் மக்கள் தங்களில் எதிர்காலம் குறித்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
காரணம் தேசிய முன்னணி அரசாங்கம் ஜொகூர் மக்களுக்கு உரிய சேவைகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.
ஆக ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி நீடிக்க வாக்காளர்கள் நாளை சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.
முன்னதாக நேற்று இரவு கெம்பாஸில் மக்கள் வெள்ளத்தாலும் ஜொகூர் மக்களின் அசாதாரணமான கூட்டம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தன்னிடம் கைகுலுக்கவும் சந்திக்கவும் திரண்டு வந்த வாக்காளர்களைத் தொடர்ந்து வரவேற்றார்.
இந்த அசாதாரணமான வரவேற்பு தேசிய முன்னணி தலைமைக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
நீல அலை ஜொகூரை மேலும் மேலும் சூழ்ந்து வருகிறது. இது வெற்றிக்கான அடித்தளம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:51 pm
டிலி மை எக்ஸ்போ 2.0 கண்காட்சி முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது: டைலான்
July 10, 2026, 4:19 pm
16ஆவது ஜொகூர் சட்டமன்ற தேர்தல் அன்று மாநிலத்தின் சில பகுதிகளில் மழை, இடி முழக்கம் ஏற்படும்
July 10, 2026, 2:56 pm
எல்ஆர்டி 3 திட்டம் செயல் வடிவம் பெற்றதால் நஜிப்பின் உணர்வுகள் வெளிப்பட்டன: கைரி
July 10, 2026, 2:52 pm
