நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: புதின் வர்த்தக அழைப்பு

மாஸ்கோ:

வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பொருளாதாரக் கூட்டம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “ரஷ்யாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. 

வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அனைத்து ரஷ்யர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ” என்று தெரிவித்தார்.

இது ஒரு வர்த்தக நடவடிக்கையாகவும் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியும். வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதனை கவனத்தில் கொண்டு எங்கள் நாட்டிற்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. ஸ்புட்னிக் கொரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset