செய்திகள் வணிகம்
எட்டு ஆண்டுகளில் மலேசிய ரிங்கிட்டின் உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது
ஷா ஆலாம்:
அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு RM3.89 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையாகும். இந்த முன்னேற்றம், நாட்டின் பொருளாதாரத்தின் மீதுள்ள நம்பிக்கை அதிகரித்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
உலகளாவிய சூழல் இன்னும் சவாலானதாக இருக்கும் நிலையில், இந்தச் சாதனை மலேசியா நிலையான பாதையில் பயணிக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறி என பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மது ஃபர்ஹான் ஃபௌஸி தெரிவித்தார்.
மேலும், இந்தச் சிறப்பான செயல்திறன், அரசியல் நிலைத்தன்மையையும் தொடர்ச்சியானப் பொருளாதாரக் கொள்கைகளையும் உறுதிப்படுத்திய பிரதமரின் வெற்றியை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
“நாட்டின் செலவுகளைக் கட்டுப்பாட்டுடன் நிர்வகித்தல், நிதி விரயத்தைத் தடுப்பது, நிர்வாகத்தை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள், முதலீட்டாளர்கள், வணிக சமூகத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்க உதவியுள்ளன.
குடும்பங்களைப் பராமரிக்க கடினமாக உழைக்கும் சாதாரண மக்களுக்கு, மலேசிய ரிங்கிட்டின் உயர்வு தினசரி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வலுவான நாணய மதிப்பு, அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செலவைக் குறைக்க உதவுவதோடு விலையியல் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது. இதன் மூலம், மக்களுக்கு கூடுதல் நிதிசுமை ஏற்படுத்தாமல் அரசு தொடர்ந்து பல உதவிகளை வழங்க முடிகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற முக்கிய துறைகளில் உயர்மதிப்புடைய முதலீடுகளை ஈர்க்க உதவுகிறது என்றார் அவர்.
தொடர்ந்து, அதிகமான சர்வதேச நிறுவனங்கள் மலேசியாவை முதலீட்டு தலமாகத் தேர்வு செய்வதால், இளைஞர்கள், உள்ளூர் தொழில்முனைவோருக்கான பொருளாதார வாய்ப்புகள் விரிவடைகின்றன என்றும் அவர் கூறினார்.
"ரிங்கிட்டின் வலுவான உயர்வு சிறந்த தலைமையின் கீழ் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தற்போது தெளிவான பலனைத் தரத் தொடங்கியுள்ளன என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்,” என்று அவர் விளக்கினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 7:10 am
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
June 22, 2026, 12:21 pm
மத்திய கிழக்கு பதற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் சரிவு
June 18, 2026, 4:49 pm
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
June 15, 2026, 2:22 pm
போர் நிறுத்தம் எதிரொலி: சரிந்தது எண்ணெய் விலை
June 15, 2026, 12:24 pm
டுரியானின் அறுவடைக்காலம் தொடங்குகிறது: விலை ஏறலாம் என விற்பனையாளர்கள் கவலை
June 11, 2026, 6:06 pm
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்: பணவீக்க அதிர்ச்சியால் தள்ளாடும் டாலர்
June 11, 2026, 6:01 pm
லக்சாவிலிருந்து கலை உலகம் வரை: மூன்று தலைமுறைப் பெண்களின் வெற்றிப் பயணம்
June 10, 2026, 10:39 am
வாடிக்கையாளர்களைக் கவர உணவகங்களை அதன் செயலியில் விளம்பரப்படுத்த கிராப் நிறுவனம் புதிய திட்டம்
June 8, 2026, 11:15 am
