செய்திகள் வணிகம்
2026 ஜனவரியில் மலேசியாவின் பணவீக்கம் 1.6 சதவீதமாக உயர்வு: புள்ளிவிவரத் துறை
கோலாலம்பூர்:
2026 ஜனவரியில் மலேசியாவின் பணவீக்கம் 1.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மலேசிய புள்ளி விவரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 133.6 ஆக இருந்த நுகர்வோர் விலைச் சுட்டெண், தற்போது 135.7 ஆக உயர்ந்துள்ளதாக DOSM கூறியது.
இந்த உயர்வு முக்கியமாக நான்கு பிரிவுகளால் ஏற்பட்டதாக முதன்மை புள்ளியியலாளர் முகமது உசிர் மஹிதீன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அதில், தனிப்பட்ட பராமரிப்பு, சமூக பாதுகாப்பு, பல்வேறு பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் பிரிவு 6.6 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடப்படுகின்றது (டிசம்பர் 2025: 5.7 சதவீதம்).
இதனைத் தொடர்ந்து கல்வி 3.2% (டிசம்பர் 2025: 2.8%), வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, பிற எரிபொருட்கள் 1.2% (டிசம்பர் 2025: 0.9%), பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரம் 0.9% (டிசம்பர் 2025: 0.8%) ஆக பதிவாகியுள்ளன.
மேலும் மதுபானங்கள், புகையிலை (2.5%), உணவு, பானங்கள் (1.5%) பிரிவுகளும் உயர்வை பதிவு செய்தன.
573 பொருட்களில் 355 பொருட்கள் (சுமார் 62%) விலை உயர்வை பதிவு செய்துள்ளன. இதில் 346 பொருட்கள் (97.5%) 10 சதவீதத்திற்கும் குறைவாக உயர்ந்தன என்று DOSM தெரிவைத்திருக்கிறது.
2026 ஜனவரியில், 9 பொருட்கள் மட்டுமே 10 சதவீதத்திற்கும் மேல் உயர்வை கண்டன. 173 பொருட்களின் விலை குறைந்தது, 45 பொருட்களின் விலை மாற்றமின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் எரிப்பொருட்களான RON97 பெட்ரோல் லிட்டருக்கு RM3.11 (டிசம்பர் 2025: RM3.24) ஆக உயர்ந்துள்ளது. அதனையடுத்து, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு RM2.89 (டிசம்பர் 2025: RM3.03) ஆக குறைந்துள்ளது. சபா, சரவாக், லபுவானில் டீசலின் விலை RM2.15-ஆக உள்ளது.
தேசிய பணவீக்க அளவை (1.6%) விட அதிகமாக பதிவான மாநிலங்களாக ஜொகூர் 2.1%, நெகிரி செம்பிலான் 2.0%, பஹாங் 1.9% ஆகியவை உள்ளன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவின் பணவீக்கம் இந்தோனேசியா, வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகளை விட குறைவாகவும், தாய்லாந்தை விட அதிகமாகவும் உள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
முகநூலில் அதிகரித்துவரும் சட்டவிரோத வனவிலங்கு விற்பனை: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
June 27, 2026, 6:29 pm
ஒரு கிலோ 1 ரிங்கிட்: 3,000 கிலோ துரியன் பழங்கள் வெறும் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
June 26, 2026, 12:47 pm
2ஆவது ஆண்டாக மலேசிய - டிலி வர்த்தக மாநாடு, கண்காட்சி முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு: டைலான்
June 25, 2026, 10:10 am
